அஞ்சல் நிலையம்
- சார்லஸ் புக்கோவ்ஸ்கி
- In stock, ready to ship
- Inventory on the way
அமெரிக்காவில் உள்ள ஏழைகளின் எளிய வாழ்வு, எழுதும் கலை, குடி, பெண்களுடனான தொடர்பு, அடிமைத்தொழில் ஆகியவற்றை புகோவ்ஸ்கி படைப்புகள் பேசுகின்றன. இவர் ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் மற்றும் ஆறு புதினங்கள் எழுதியுள்ளார். அவை அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அமெரிக்க செய்தித்தாளான “ஓபன் சிட்டி”யில் இழிந்த கிழவனின் குறிப்புகள் என்ற பெயரில் பத்தி எழுதியதைத் தொடர்ந்து, அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ. அவருக்கென தனி கோப்பு தயாரித்து கண்காணித்து வந்தது. 1986ம் ஆண்டு “டைம்” பத்திரிக்கை புகோவ்ஸ்கியை ”அமெரிக்க கீழ்நிலை வாழ்வின் அரசவைக்கவிஞர்” என்று புகழாரம் சூட்டியது. இப்புதினம் புனைவு என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், புகோவ்ஸ்கியின் சுயசரிதையாகவே கருதப்படுகின்றது. ழீன் பால் சார்த்தர் இவரை அமெரிக்காவின் மிகச்சிறந்த கவிஞர் என புகழ்ந்துள்ளார்.
Author: சார்லஸ் புக்கோவ்ஸ்கி
Translator: பாலகுமார் விஜயராமன்
Genre: நவீன உலக கிளாசிக் நாவல்
Language: தமிழ்
Type: Paperback