சூரஜ் யங்டே

    Filter

      இந்தியாவின் முன்னணி அறிஞர்களில் ஒருவரான முனைவர். சூரஜ் யங்டே, GQ பத்திரிக்கையால் "செல்வாக்குமிக்க 25 இளம் இந்தியர்களில் ஒருவர்" என்றும் Zee குழுமத்தால் "தலித் இளைஞருள் மிகவும் செல்வாக்கு படைத்தவராகவும்" தேர்வு செய்யப்பட்டவர். தி இந்து பத்திரிக்கையின் இந்த தசாப்தத்தின் "சிறந்த புனைவு அல்லாத புத்தகங்களின்" பட்டியலில் Caste Matters இடம்பிடித்துள்ளது. இது வரையிலும் ஏழு மொழிகளில் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


      ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா என்ற நான்கு கண்டங்களில் படித்தவர் சூரஜ் யங்டே. ஓர் ஆப்பிரிக்க பல்கலைக்கழகத்தில் – ஜோஹன்னஸ்பர்கில் உள்ள விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகம் - முனைவர் பட்டம் பெற்ற முதல் தலித் இந்தியர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு. அத்தோடு அவர் இந்தியா மற்றும் இங்கிலாந்தின் அங்கீகாரம் பெற்ற சர்வதேச மனித உரிமை வழக்கறிஞரும் ஆவார்.


      சாதி, இனம் மற்றும் புலம்பெயர் வாழ்வு குறித்த நூற்றுக்கும் அதிகமான கட்டுரைகளையும் விமர்சனங்களையும் சூரஜ் யங்டே பதிப்பித்துள்ளார். தற்போது, தலித்துகள் மற்றும் கறுப்பின மக்களின் வாழ்வு குறித்த விமர்சனக் கருத்தாக்கம் ஒன்றை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார்.

      1 product