பாவெல் சக்தி

    Filter

      1987-ல் மதுரை மாவட்டம் எ எழுமலை கிராமத்தில் பிறந்த இவர், ஆரம்பப் பள்ளிக்கல்வியை நாகர்கோவிலிலும், மேல்நிலைப் பள்ளிப்படிப்பை எழுமலையிலுமாக பயின்று, இளங்கலை பட்டப்படிப்பிற்காக மீண்டும் நாகர்கோவில் வந்து 18 ஆண்டுகள் கடந்துவிட்டன. வரலாறிலும் சட்டத்திலும் முதுகலை பட்டப்படிப்பை முடித்து, கடந்த 2011 முதல் நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

      "பின்நவீனத்துவமும் அடையாள அரசியலும்”, "என்.ஜி.ஓ-க்கள் ஓர் ஏகாதிபத்திய அபாயம்” என இரண்டு மொழிபெயர்ப்புகளும், "நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்”, தொல்பசிக் காலத்து குற்ற விசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக்குறிப்புகள் ஆகிய குறுநாவல்களும், சிறுகதைகளும் அடங்கிய தொகுப்புகள் வெளிவந்துள்ளன.