About Us

Ethir Veliyeedu is an independent publishing house founded in 2006 with a vision to foster a great passion for reading in Tamil, one of the ancient languages of the world. We publish original fiction, non-fiction and translations of world literature with a simple mission to entertain, educate and inspire readers for generations. We are one of only a handful of publishing houses dedicated to increasing access to world literature for Tamil readers. Making world literature available in Tamil is crucial to opening our cultural borders, and its availability plays a vital role in maintaining a healthy and vibrant book culture. Ethir Veliyeedu strives to cultivate an audience for these works by helping readers discover imaginative, stunning works of fiction and non-fiction and by creating a constellation of international writing that is engaging, simulating and enduring. Some of the prominent names in world literature that we have published in Tamil include Salman Rushdie, Haruki Murakami, Dan Brown, Arthur Rimbaud, Yukio Mishima, Alice Walker, Margaret Atwood, Abdulrazak Gurnah, J M Coetzee, Khaled Hosseini, Jorges Louis Borges, Julio Cortazar, Milorad Pavic, Carlos Fuentes, Amartya Sen, Ramachandra Guha, Romila Thapar and many more...

Our dedicated team is committed to helping authors and translators realize their very best work and to finding innovative new ways of bringing stories and ideas to a wide group of audiences. By embracing new technologies and collaborating with authors at every stage of the publishing process – editorial and design, sales and marketing, production and distribution – we ensure that the authors are provided with the greatest platform available.

Also we are keen in protecting the intellectual property and freedom of expression of our authors, ensuring that their voices carry beyond the page and into the folds of tamil speaking communities and societies around the globe. Till 2022, 400 books have been published by us and our authors have won or been shortlisted for a slew of regional and national awards.
சமூகப்பொறுப்போடும் தெளிந்த அரசியல்நிலைப்பாடோடும் தொடர்ச்சியாக நூல்களை வெளியிட்டு வரும் எதிர் வெளியீடு தமிழின் முதன்மையான பதிப்பகங்களுள் ஒன்று. தமிழில் வாசிப்பைப் பரவலாக்கும் மீப்பெரும் கனவுடன் 2006-ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது எதிர் வெளியீடு.
பொழுதுபோக்க மட்டுமல்லாது புத்தகங்கள் என்பவை மனிதனின் மீட்சிக்கானத் திறவுகோல்கள் எனும் நம்பிக்கையோடு புனைவுகள், அபுனைவுகள் மற்றும் மொழியாக்கங்கள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக தமிழில் வெளியிடுகிறோம்.

குறிப்பாக, பாரதியின் கனவிற்கேற்ப, உலக இலக்கியங்களில் முக்கியமான நூல்களைத் தேர்ந்தெடுத்து தமிழ் வாசகர்களுக்கு அவற்றை அறிமுகம் செய்கிறோம். சல்மான் ருஷ்டி, ஹருகி முரகாமி, யுகியோ மிஷிமா, ஆலிஸ் வாக்கர், மார்கரெட் ஆட்வுட், அப்துர் ரசாக் குர்னா, ஆர்தர் ரைம்போ, ஜே எம் கூட்ஸி, மிலோராட் பாவிச், ஹூலியோ கொர்த்தஸார், கார்லோஸ் ஃபுயந்தஸ், ரோமிலா தாப்பர் மற்றும் ராமச்சந்திர குஹா என இன்னும் பலரையும் தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறோம்.

ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்ட எளிய குழு எதிர் வெளியீட்டுக்காகப் பணிபுரிகிறது. எழுத்தாளர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் அவர்தம் படைப்புகளையும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் பணியில் இந்தக்குழு தீவிரமாகச் செயல்படுகிறது. எழுத்தாளர்களின் உரிமைகளைக் காப்பதிலும் அவர்களைச் சரியான முறையில்
முன்னெடுத்துச் செல்வதிலும் எதிர் வெளியீடு அக்கறை கொண்டுள்ளது.
புத்தக வடிவமைப்பு, தயாரிப்பு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் புதிய தொழில்நுட்பங்களையும் யுக்திகளையும் பயன்படுத்துவதன் மூலம் உலகின் எந்த மூலைக்கும் எதிர் வெளியீடு நூல்கள் சென்றடைவதை உறுதிபடுத்துகிறோம். இதன்பொருட்டே 2021ஆம் ஆண்டுக்கான இந்திய அளவிலான சிறந்த புத்தகத் தயாரிப்புக்கான மூன்று விருதுகளை எதிர் வெளியீடு வென்றுள்ளது.

2022 வரைக்கும் 400-க்கும் மேற்பட்ட நூல்கள் எங்களுடைய பதிப்பகத்தின் மூலம் வெளியாகியுள்ளன. இந்திய மற்றும் மாநில அளவிலான பல விருதுகளை இந்நூல்கள் வென்றுள்ளதில் பெருமிதம் கொள்கிறோம்.