இஸ்மத் சுக்தாய் கதைகள்
Regular price
Rs. 500.00
Sale priceRs. 450.00
Save 10%
/
- இஸ்மத் சுக்தாய்
- In stock, ready to ship
- Inventory on the way
1930 களில் பெண் எழுத்தும், பெண்களைப் பற்றிய எழுத்தும் அரிதான
காலக்கட்டத்தில், பெண் எழுத்துகளின் பரீட்சார்த்த முயற்சிகள்
அரிதானதாகவும், சமூகக் கேலிகளுக்கு ஆளாகுவதாகவும் இருந்த கடுமையான சமூக நடைமுறைகளுக்கு இடையே, இஸ்மத் சுக்தாய் பெண்ணின் பாலின பண்புகள் பற்றி ஒப்பற்ற வெளிப்படைத்தன்மையோடு ஆராய்ந்து, அதனைத் தன் கதைகளில் துணிவுடன் பதிவு செய்திருக்கிறார். அவர் தனது காலத்தில் நிலவிய அரசியல் மற்றும் சமூக நெறிகள் குறித்து ஆய்வு செய்து, அதைத் தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்த எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தனக்குத் தெரிந்த உலகத்தைச் சார்ந்த மனிதர்களின் வாழ்வியலைப் பற்றி எழுதி, உருது மொழியின் உரைநடை இலக்கியத்திற்கு நடுத்தர வர்க்கத்தின்மரபுகளை கொண்டுவந்திருக்கிறார். உருது மொழி புதினத்தின் தோற்றத்தையே இஸ்மத் சுக்தாயின் எழுத்து முற்றிலும் மாற்றி அமைத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.
இந்தக் கதைத் தொகுப்பு, இஸ்மத் சுக்தாயின் கற்பனைப்புனைவு மற்றும் புனைவல்லாத எழுத்துகளை ஒருசேரப் பதிவு செய்கிறது. தன்னுடைய சாதுரியமான சொல்லாடல், உணர்ச்சியூட்டும் உரையாடல்,
நையாண்டியான நகைச்சுவை, தனது இயல்பான துடுக்குத்தனம்,
புத்திக்கூர்மை மற்றும் விரிவான பார்வை ஆகியவற்றைக்கொண்டு இஸ்மத் சுக்தாய் உருவாக்கியுள்ள மிகச்சிறந்த படைப்புகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
Author: இஸ்மத் சுக்தாய்
Translator: ஜி.விஜயபத்மா
Genre: நவீன இந்திய கிளாசிக் சிறுகதைகள்
Language: தமிழ்
Type: Paperback