பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் பார்த்து வந்த தமிழ்நாடு மருத்துவமனையின் நிர்வாக செயலாளர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், போன்ற வெகுஜனப் பத்திரிகையில் பகுதிநேர நிருபராக பணியாற்றினார் பெண்மணி என்ற பெண்களுக்கான மாதாந்திரப் பத்திரிகையில் எழுத்தாளர் அனுராதா ராமணனுக்கு பிறகு ஆசிரியர் பொறுப்பேற்று திறம்பட நடத்தினார். பின் மனுசி என்ற பெண்களுக்கான விழிப்புணர்வு மாத இதழை தானே பதிப்பாளராகவும் , ஆசிரியராகவும் இருந்து நடத்தினார். காற்றின் மொழி , கவிதைப் பெண்கள், அகத்தனிமை , முல்லை பெரியாறு பிறந்த கதை (விகடன் பிரசுரம் ), மற்றும் மொழிபெயர்ப்பு நாவல் 'மணற்குன்று பெண்'(எதிர் வெளியீடு ) அ எழுத்துக்கள், மேகதேவதை சிறுகதைத் தொகுப்பு சீனப் பெண்கள் , சொல்லப்படாத கதை (எதிர் வெளியீடு ) போன்ற புத்தகங்களும் Inside Inda (Rajvee Creations) என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
3 products