காடுகளுக்காக ஒரு போராட்டம்
- சிகோ மென்டிஸ்
- In stock, ready to ship
- Inventory on the way
1980-களில் பிரேசிலின் இயற்கை உலகில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களுக்கு யார் காரணம் என்று தெரியாமலே போயிருக்கக்கூடும். யாராலும் அறியப்படாத போராளிகள்தான் அதற்குக் காரணம். அவர்கள் எறும்புகளைப் போன்ற சாதாரணப் பணியாளர்கள். அந்த எறும்புகளில் ஒன்றான சிகோ மெண்டிஸ், வெளி உலகத்துக்குத் தெரியவந்தவர். போராட்டத்தில் உயிரையே இழந்தவர். உலகின் மிகப் பெரிய காடுகள் அமேசான் என்று தெரிந்த பலருக்கும், ரப்பர் தோட்டங்களுக்காக அந்தக் காடுகள் அழிக்கப்பட்டதும், அந்தக் காடுகளை அழிவிலிருந்து காக்கப் போராடிய தொழிற்சங்கத் தலைவர் சிகோ மெண்டிஸ் பற்றியும் அதிகம் தெரிந்திருப்பதில்லை. தொழிலாளர் தலைவர் மூன்றாம் உலக நாடுகளுக்கே உரிய சிக்கலான, குழப்பமான பிரச்சினைகளைக் கொண்ட நாடு பிரேசில். வளரும் நாட்டு மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரம் எப்போதுமே பிரச்சினைதான். இப்படியொரு நெருக்கடியான சூழ்நிலையில் பிரேசிலின் ஒரு ஓரத்தில் ரப்பர் எடுக்கும் அடிமைத் தொழிலை ஒழிக்கவும், தொழிலாளர் உரிமைகளுக்காகவும் 80-களில் குரல் கொடுத்தவர் சிகோ மெண்டிஸ்.
Author: சிகோ மென்டிஸ்
Translator: பேரா.ச.வின்சென்ட்
Genre: சுற்றுச்சூழலியல்
Language: தமிழ்
Type: Paperback