பாரம்பரிய இந்தியப் பண்பாடுகள்
- ரொமிலா தாப்பர்
- In stock, ready to ship
- Inventory on the way
மக்கள் எவ்விதம் வாழ்ந்து தம்மை வெளிப்படுத்துகிறார்கள், பொருட்களையும் சிந்தனைகளையும் எப்படி மதிப்பிடுகிறார்கள் என ஒவ்வொரு சமூகத்திற்கும் அதனதன் பண்பாடுகள் உள்ளன. இந்தியப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டமைப்பது எது என்பது குறித்து நிறையவே விவாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நூற்றாண்டுகளில் பண்பாட்டு கருத்தமைவு குறித்த வரையறைகள் எப்படி மாறியுள்ளன என்று விளக்கி, கூடுதல் கவனம் தேவைப்படுவதை சுட்டிக்காட்டுகிறார் தாப்பர். கடந்த காலத்தின் சிந்தனைகள் மற்றும் தேர்ந்தெடுத்த இனங்களால் பண்பாடுகள் வரையறுக்கப்படுகையில், ஒருசில தவிர்த்து ஒப்பீட்டளவில் அறியப்படாதவனவாகவே உள்ளன. இருப்பினும் கடந்த காலத்துடன் தொடர்பு படுத்துவதிலும் உடனிகழ்கால இருப்பு என்றவகையில் அவற்றின் முக்கியத்துவத்திலும், ஒவ்வொன்றும் ஒரு சூழலையும் அர்த்தத்தையும் பெற்றுள்ளன. பண்பாட்டுடன் தொடர்பற்றதாகப் பெரிதும் கருதப்படும் சூழல்கள், எதிரான வகையில் தெளிவுப்படுத்தக் கூடியனவாக இருக்க முடியும். பண்பாடுகளை அடையாளப்படுத்தும் பொருட்களிலிருந்து, சமூகப் பாகுபாடு, பெண்களின் பாத்திரம், அறிவியல் - அறிவின்பாலான அணுகுமுறைகள் போன்ற பண்பாடுகளை வடிவமைக்கும் கருத்துகள் வரை இவற்றில் சிலவற்றை தாப்பர் தொட்டுச் செல்கிறார். சிந்தனையைத் தூண்டும் இதுபோன்ற புத்தகங்கள் விவாதத்தைக் கிளப்பும்; இந்தியாவின் பண்பாடு குறித்த நடப்பு மூட மரபுகள் சிலவற்றை ஓய்ந்துபோகச் செய்யும்.
Author: ரொமிலா தாப்பர்
Translator: சா. தேவதாஸ்
Genre: கட்டுரை
Language: தமிழ்
Type: Paperback