நவீன தமிழ் இலக்கியத்தின் மொழிபெயர்ப்புப் பணியில்
மிகப்பெரும் பங்கு வகிக்கும் சா. தேவதாஸ், தமிழின் குறிப்பிடத்தகுந்த
விமர்சகர்களில் ஒருவர். கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளராக
இருந்து ஓய்வு பெற்று ராஜபாளையத்தில் வசித்துவருகிறார். இதுவரை
ஆறு கட்டுரை நூல்களையும், 30 மொழிபெயர்ப்புகளையும் தமிழுக்குத்
தந்துள்ளார். இடலோ கால்வினோ, பாப்லோ நெருடா, ஹென்றி ஜேம்ஸ்
போன்றவர்களின் முக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். இவர்
மொழிபெயர்த்த ‘லடாக்கிலிருந்து கவிழும் நிழல்’ எனும் நூலுக்காக,
2014ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. பல்வேறு
இலக்கிய ஆளுமைகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.