வாரண மௌனி: ஆப்பிரிக்கக் காட்டில் ஒரு யானைக் கூட்டத்துடன் என் வாழ்க்கை
- லாரன்ஸ் ஆண்டனி | கிரகாம் ஸ்பென்ஸ்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
நினைவிலிருந்து கரையாத கதாபாத்திரங்களும் வியப்பூட்டும் காட்டுயிர்களும் நிறைந்த The Elephant Whisperer நூல் நமக்கு அறிமுகப்படுத்தும் களம்,சாகசங்களையும் காடுகளையும் வன உயிர்களையும் விரும்பும் உலக மக்கள் யாவரையும் கவரக்கூடியதாகும்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாவலராய் இயங்கி வந்த லாரன்ஸ் ஆண்டனியை, சூலூலேண்டில் உள்ள அவரது துலா துலாவில் (பாதுகாக்கப்பட்ட தனியார் காட்டுப் பகுதி) ஒரு முரட்டு யானைக் கூட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்பட்டபோது, அதை நிராகரிக்க வேண்டும் என்று அவரின் பொது புத்தி சொன்னாலும் அந்த யானைக் கூட்டத்தின் உயிர் மீட்க அவற்றின் கடைசி வாய்ப்பாக தான் இருப்பதை அவர் உணர்ந்தார். அவை கணிக்க முடியாதவையாகவும் ஆபத்தானவையாகவும் இருந்தன. ஆண்டனி அவற்றை நிராகரித்து விட்டால் அவை நிச்சயம் கொல்லப்படும் என்ற நிலையில் ஆண்டனி தன் உயிரைப் பணயம் வைத்து அந்தக் காயப்பட்ட மூர்க்கமான யானைக்கூட்டத்தின் மீள் வாழ்வை துலா துலாவில் தொடர செய்ததோடு அவற்றுடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட உறவு, கூட்டத்தை வழிநடத்திய ஞானம் பொதிந்த தாய் யானை ‘நானா’ முதல், வாழ்விற்கான தீராத தாகத்தில் உயிர் பிழைக்க தொடர் போராட்டங்களின் அங்கமான குட்டி யானைகளும், எப்போதும் கூட்டத்தின் தலைமைக் காவலாளியாக சீறி நிற்கும் போராளி சகோதரியான ‘ஃபிரான்கி’ வரை, இந்த யானைக்கூட்டம் எவ்வளவு மகத்தான குடும்பம் என்பதை அவருக்கு உணரச் செய்தது.
Author: லாரன்ஸ் ஆண்டனி
கிரகாம் ஸ்பென்ஸ்
Translator: மானசி
Genre: சுயசரிதை
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 978-93-48598-15-8