முற்றாத இரவொன்றில்
- Free worldwide shipping
- In stock, ready to ship
- Backordered, shipping soon
Pre-Order
This book will be released by the Second week of October, 2026
ஆயிரம் பக்க நாவல்கள் இன்று அநாயாசமாக அச்சேற ஆரம்பித்துவிட்டன. பிரச்சினையின் ஆதிதொட்டு, அகழ்வாராய்ச்சியில் இறங்கி அழகழகாகத் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கின்றன. இங்கே சிறியதொரு களம், நாவலாய் விரிந்துள்ளது. கால் நூற்றாண்டுக் கால எழுத்துப் பயிற்சியின் தொடர்ச்சி என அனுமானிக்கிறேன். காதலும் வீரமும் தமிழரின் பண்பாடு என்ற கோஷங்களும் கோட்பாடுகளும் ஏதோ ஒரு சிதைவில் சந்திக்கின்றன.
சாதீயம் எனும் மாபெரும் மாயப் பிசாசு ஒவ்வொரு மனிதனின் அசைவிலும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.
அந்த நிஜத்தை உணர்ந்தாக வேண்டியிருக்கிறது. அது ஒவ்வொரு சாதிக்குள்ளும் இரு பிளவுகளைக் கொண்டு ஜீவிக்கிறது. அந்தப் பிரிவுகளில் உலகம் ஒடுங்குமானால் பிரச்சினைகள் கூர்மைப்படும். ஆனால், அசாத்தியமான செல்வழியில்தான் வர்க்கங்கள் வாய்பிளந்து உறங்க வைக்கப்படுகின்றன.
ஒருநாள் இரவில் நடக்கிற சம்பவத்தைச் சொல்கிறபோது வாழ்வின் மிச்சம், தாழம் புதராக மணத்துக் காட்டுகிறது.
ம. காமுத்துரை
Author: ம. காமுத்துரை
Genre: நாவல்
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 9789375770145
Use collapsible tabs for more detailed information that will help customers make a purchasing decision.
Ex: Shipping and return policies, size guides, and other common questions.