மீரான் மைதீன் கதைகள் (1993-2026)
- Free worldwide shipping
- In stock, ready to ship
- Backordered, shipping soon
Pre-Order
This book will be released by the Second week of September, 2026
வாழ்வு சார்ந்த கதைகள் நமக்கு நேரடி அனுபவங்களைத் தந்துவிடுகின்றன. அவற்றின் பல்வேறு உணர்வுகள் நம்மையும் அதற்குள் இழுத்துச் செல்கின்றன. சத்தமிட்டுச் சிரிக்க, மௌனமாக இருக்க, துளிர்க்கும் கண்ணீரை ரகசியமாகத் துடைத்துக்கொள்ள என மீரானின் கதைகளில் உணர்வுச் சுருள் நம்மைச் சுருட்டிக்கொள்கிறது. அறிவும் மனமும் இழைந்து செல்லும் கதைகள் நம்மை இன்னும் மெனக்கெட வேண்டுமெனக் கோருகின்றன. அவை கட்டமைக்கும் கதைப்புள்ளியைத் தொட்டு விடுவதற்கு நம்முடைய வாசிப்பு அனுபவமும் சமகால சமூக வெளிப்பாடுகளின் மீதான நமது அக்கறையும் புரிதலும் அதிகமாய்த் தேவைப்படுகின்றன.
வாழ்வின் சக்கரங்களில் பற்களாக இருந்து அதனை அங்கும் இங்குமாக அசைத்து அசைத்து முன்னேற்றிக் கொண்டிருப்பதில் எளிய மக்களுக்கும் நிரம்பப் பாத்தியதை உண்டு. பல்வேறு எளிய மக்கள் மீரானின் கதைகளில் தங்களையும் பாத்திரங்களாக முன்வைத்துக் கொள்ளுகிறார்கள்.
-வி. சிவராமன்
Author: மீரான் மைதீன்
Genre: சிறுகதைகள்
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 9789375770237
Use collapsible tabs for more detailed information that will help customers make a purchasing decision.
Ex: Shipping and return policies, size guides, and other common questions.