துரிஞ்சி
- பூவிதழ் உமேஷ்
- In stock, ready to ship
- Inventory on the way
புறக் கண்ணால் பார்த்தவற்றைக் கவனமாக மறந்துவிட்டு, அகக் கண்ணால் மீண்டும் அவற்றைப் பார்த்து, நெஞ்சுக்குள் கண்டவற்றைக் கவிதையாக எழுதுகிறார் பூவிதழ் உமேஷ். தியானத்தில் இருக்கும் துறவி, யாரும் திறக்கவியலாத அளவுக்குச் சிறிது கண்திறந்து பார்க்கும் செயலைப் போன்றது. அதனால்தான் இந்தக் கவிதைகளில் யூகிக்கவியலாத அடுத்தடுத்த வரிகள் வந்து விழுகின்றன. சாமைத் தாளடிக் கூலத்தில் கௌதாரி முட்டைகளும் இருக்கும்; பாம்பு முட்டைகளும் இருக்குமே அப்படி. சொல்லியவற்றின் சொல்லப்படாத பகுதியைப் பேசும் இந்தக் கவிதைகள், மூலவருக்குப் பதிலாக உற்சவர் வீதியுலா வருவதைப் போன்ற தோற்றம் கொண்டவை. அதாவது 'அகங்கை கொண்டு புறங்கையை எழுதிப் பார்ப்பதைப் போல' என்று புதுமைப்பித்தனை பிரபஞ்சன் இப்படித்தான் சொல்வார். தமிழ் முகம் காட்டும் புதுமுகக் கவிதைகள் இவை.
- கதிர்பாரதி
Author: பூவிதழ் உமேஷ்
Genre: கவிதைகள்
Language: தமிழ்
Type: Paperback