ச்சூ காக்கா
- பிரபு தர்மராஜ்
- In stock, ready to ship
- Inventory on the way
நாமெல்லோரும் ஒருவகையில் பாவனை நடிகர்கள். அழும் முகமூடியையும் சிரிக்கும் முகமூடியையும் அவரவர் சௌகரியங்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் பயன்படுத்திக் கொள்கிறோம். சமகாலம் முகமூடிகளையே முகமாக்கிவிட்டது. பிரபுவின் கதைகள் இந்த மூடிகளைச் சற்றேத் திறந்து மூச்சுவிட வைக்கின்றது...
கருப்புநகைச்சுவை,நீல நகைச்சுவை எள்ளல், சுய, அரசியல், பகடி என எல்லா வகைகளும் பிரபுவின் எழுத்தில் கூடிவந்தாலும் உள்ளூர அதிலொரு சோகமும் அவ்வப்போது இழையோடும்... இருட்டில் சிறிது வெளிச்சத்தைப் பாய்ச்சுவதே அவல நகைச்சுவைகளின் நோக்கம். துயரச் சம்பவங்களுக்கும் தடைசெய்யப்பட்டத் தகவுகளுக்கும் அவை ஒளியூட்டுகின்றன.
பிரபுவின் கதைகள் நமக்குள்ளிருக்கும் பாவனையற்ற ஒரு முகத்தை வெளியேக் கொணர்கின்றன ... ஒப்பனைகளை களைந்துவிட்டால் மனிதர்கள் வேறென்ன செய்ய முடியும் சிரிப்பதையோ... அழுவதையோ தவிர... பிரபு அழ வைப்பதில்லை....
எழுத்தாளர் எஸ். ஜே. சிவசங்கர்
Author: பிரபு தர்மராஜ்
Genre: சிறுகதைகள்
Language: தமிழ்
Type: Paperback