காந்தியைத் தவிர காந்தியை வேறு யாரால் கொல்ல முடியும்?
- கலைச்செல்வி
- In stock, ready to ship
- Inventory on the way
இந்தப் புத்தகம் அழகிய மூன்றிழைப் பின்னல். ஒரு இழை உலகறிந்த காந்தியின் வரலாறு. மற்றொரு இழை இந்த வாழ்க்கைப் பயணத்தில் காந்தி தனக்குள்ளாகவே கேள்வி கேட்டுக் கேட்டுப் பெற்றுக் கொண்ட விடைகள். மூன்றாவது இழை, காந்தியை உற்று நோக்கி நோக்கி கலைச்செல்வி உணர்ந்து கொண்ட காந்தியத் தத்துவத்தின் சொட்டுகள். இவை எல்லாம் கலந்து, காந்தி தன் உள்ளங்கைகளில் மலரின் ஒரு துளித் தேனாக எவ்வாறு தங்குகிறார் என அறிந்து விட முயலும் தவிப்பே இந்த நூல். காந்தியின் வியப்பூட்டும் எல்லா அம்சங்கள் குறித்தும் இந்தப் புத்தகம் பேசுகிறது. காந்தியின் அகிம்சை என்பது என்ன. எதிரியினிடத்தும் ,தாம் யாரை எதிர்த்துப் போராடுகிறோமோ அவரிடத்தும் அகிம்சையைக் காட்டுவது என்ற கொள்கையை எவ்வாறு புரிந்து கொள்வது. காந்தி ,தன் சுயசரிதையில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுவார்: எதிரியின் தரப்பை நாம் புரிந்து கொள்ளத் தலைப்படுகிறோம் என்ற அம்சமே பிரச்சனையில் பாதியைச் சரிசெய்து விடும் என. எங்கிருந்து காந்தி இவற்றைப் பெற்று களத்திலும் வளர்த்தெடுத்தார்? அதைத் தனிமனித அறமாக மட்டுமின்றி, கோடிக்கணக்கான மக்களை ஈடுபடுத்திய அரசியல் போராட்டத்தின் அறமாகவும் அதை மாற்றும் துணிவும் உரமும் அவருக்கு எங்கிருந்து வந்தன? உண்மையின் உரத்த குரலை அவர் தம் மெல்லிய குரலில் பேசிய போது மக்கள் எங்ஙனம் அதற்குக் கட்டுப்பட்டார்கள்?
Author: கலைச்செல்வி
Genre: கட்டுரை
Language: தமிழ்
Type: Paperback