ஒரு மேகம் வரைந்து தருவாயா?   (இளையோருக்கான கதைகள்)
ஒரு மேகம் வரைந்து தருவாயா?   (இளையோருக்கான கதைகள்)

ஒரு மேகம் வரைந்து தருவாயா? (இளையோருக்கான கதைகள்)

Regular price Rs. 199.00 Sale priceRs. 180.00 Save 10%
/

  • இன்பா
  • In stock, ready to ship
  • Backordered, shipping soon

குழந்தைகளுக்கான கதைகளும் பெரியவர்களுக்கான கதைகளும் ஏராளம் வருகின்றன. ஆனால், இவற்றிற்கு இடைப்பட்ட இளையோருக்கான கதைகள் மிகச் சொற்பமாகவே எழுதப்படுகின்றன. உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும் இப்பருவத்தில்தான் கதைகள் வழியே உரையாட வேண்டியது அவசியம். ஏனெனில், இப்பருவத்தில்தான் தனியே நடக்கப் பழகுவர்; தனியே சிந்திக்கப் பழகுவர். அப்போது வழித்துணையாகவும் சிந்தனைத் துணையாகவும் கதைகள் தேவைப்படும். அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்கின்றன இந்நூலின் கதைகள். அந்த வகையில் எழுத்தாளர் இன்பாவின் முயற்சி பாராட்டத்தக்கது.

எதிர்கொள்ளும் சில அனுபவங்களின் வழியே கண்டடையும் புரிதல்களுக்கு நம் வாழ்வில் நீண்ட ஆயுள் உண்டு. அவ்விதமான அனுபவங்களால் விளைந்த கதைகளின் தொகுப்பு இது. கவித்துவத்தை நெருங்கிப் புரியவைக்கும் ஒரு கதை, சந்தையின் அசல் முகத்தைக் காட்டும் இன்னொரு கதை, மலைப் பயணத்தின் திசையை மாற்றியமைக்கும் மற்றொரு கதை, கடல் அலையை வாசிப்போர் மீது தெளிக்கும் ஒரு கதை என, ஒவ்வொரு கதை முடிந்தும் சிந்தனை வழியே தொடர வைக்கும் ஆற்றல் கொண்டவை. 

கவித்துவமும் வாழ்வனுபவமும் இணைந்தோடும் கதைகள். விதவிதமான காட்சிகள். அவற்றில் உலாவும் விதவிதமான மனிதர்கள். இவற்றை எந்தக் கோணத்தில் இருந்து விவரித்தால் Gen Z ன் தொடக்க வயதினருக்கான கதைகளாக மாறும் என்கிற லாவகம் இன்பாவுக்கு இயல்பாகச் சாத்தியப்பட்டிருக்கிறது. இளையோருக்கு நிச்சயம் புதிய வாசிப்பனுபவத்தை அளிக்கும்.

 - விஷ்ணுபுரம் சரவணன்


Author: இன்பா 

Genre: இளையோருக்கான கதைகள் 

Language: தமிழ்

Type: Paperback

ISBN: 9789375779629

This site is protected by hCaptcha and the hCaptcha Privacy Policy and Terms of Service apply.


Recently viewed