அசோகர்: ஒரு தத்துவவியலாளர்- அரசரின் சொல்லோவியம்
- பேட்ரிக் ஆலிவெல்
- In stock, ready to ship
- Inventory on the way
அரசர்கள் தார்மிகத் தத்துவம் கொண்டிருப்பதில் தனித்துவமானவராக இருக்கிறார் அசோகர். பரந்துவிரிந்திருந்த அவரது பேரரசு முழுக்கப் பாறைகளிலும் தூண்களிலும் அவர் உருவாக்கியிருந்த கல்வெட்டுகள் மூலம். வரும் தலைமுறையினருக்குத் தன் வார்த்தைகளைக் கடத்துவதில் பண்டைய அரசர்களுள் தனித்துவமான ஒருவராக இருக்கிறார். ஓர் ஆட்சியாளராக. அசோகர் அவரது சொந்தப் பற்றுறுதியைப் பிடிவாதமாகக் கொண்டு. அதன் அடிப்படையில் அவரது பேரரசுக்குள் காணப்பட்ட பலதரப்பட்ட மதங்களை ஒற்றைத்தன்மையில் அல்லது தட்டையாக மாற்றாமல் அவற்றின் பன்மைத்துவத்தைத் தக்கவைக்கவும் வளர்த்தெடுக்கவும் முயன்றார். பலவிதமான மதக் குமுகங்களில் உள்ள கற்றறிந்தவர்களுக்கு இடையே 'உடன்படிக்கை, இசைவுத்தன்மை. பரஸ்பர மரியாதை போன்றவற்றை ஊக்குவிக்க' அசோகர் முயன்றதாக ஆலிவெல் எழுதுகிறார். அசோகரின் அரசு செயல்பட்ட விதத்தை, அதாவது நிர்வாகப் படிநிலையில் பல்வேறு நிலைகளில் இருந்தவர்களுக்கு எப்படி வேறான பொறுப்புகள் அளிக்கப்பட்டன என்பதை ஆலிவெல் இந்நூலில் சிறப்பாக விவரிக்கிறார். ஓர் ஆட்சியாளர் இலக்கியத்தன்மையோடு எழுதுவது மிக அபூர்வமானது என்றால், ஓர் அறிஞர் இலக்கியத்தன்மையோடு எழுதுவதும் அவ்வுளவு சுலபமாகக் காணக்கூடியதல்ல ஆய்வின் கறார்த்தன்மை. தீர்மானங்களுக்கு வரும் நுட்பம். நேர்த்தியான எழுத்து என்றெல்லாம் கொண்டிருப்பதால் வாழ்க்கை வரலாறுகள் எழுதுவதற்கு இந்நூல் புதிய தரநிலையை முன்வைக்கிறது எனலாம்.
ராமச்சந்திர குஹா
Author: பேட்ரிக் ஆலிவெல்
Translator: சீனிவாச ராமாநுஜம்
Genre: அபுனைவு / வரலாறு
Language: தமிழ்
Type: Hardcover