சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே (தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்)
- ஷங்கர்ராமசுப்ரமணியனின்
- In stock, ready to ship
- Inventory on the way
ஷங்கர்ராமசுப்ரமணியனின் கவிதைகள் தனித்துவமான கவிதைமொழியும் பார்வையும் கொண்டவை. அவரது கவியுலகம் உலகம் புரிந்துகொள்ளாத துயரத்தையும் உலகம் அறிந்துகொள்ளாத சந்தோஷத்தையும் இரு சிறகுகளாகக் கொண்டிருக்கிறது. அவரது கவிதைகளைப் பறக்கும் நத்தைகள் என்று சொல்லவே ஆசைப்படுகிறேன். ஆமாம். உலகிடம் நத்தைகள் எதையும் யாசிப்பதில்லை. உலகின் பாதுகாப்பின்மைக்கு எதிராகத் தமக்கான இருப்பிடத்தைத் தாமே சுமந்துசெல்கின்றன. நத்தைக் கூடு என்பது வீடன்று. அது ஒருவகை சட்டை. கடினமான சட்டை. கடினமான சட்டையை மிருதுவான நத்தை அணிந்திருப்பதைப் போன்றதுதான் கவியின் வாழ்வும். அழகு உலகைக் காப்பாற்றும் என்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. அதன் சான்றாகவே ஷங்கர்ராமசுப்ரமணியனின் கவிதைகளைக் காண்கிறேன்.
-
எஸ். ராமகிருஷ்ணன்
Author: ஷங்கர்ராமசுப்ரமணியனின்
Compiled by: வே.நி. சூர்யா
Genre: கவிதை
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 978-81-19576-94-4