கல்லறையின் வாக்குமூலம்
Regular price
Rs. 375.00
Sale priceRs. 337.00
Save 10%
/
- அதோனிஸ்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
ஒரு தீர்க்கதரிசனமாக... ஒரு வாக்குமூலமாக... அரபுலகின் மரபை, அதன் அரசியலை, அதன் அழகியலை இதமாகவும் அழுத்தமாகவும் முன்வைப்பவை அதோனிஸின் கவிதைகள்.
இயற்கையை அதன் இயல்போடு, பசியை அதன் வலியோடு, காதலை அதன் பித்தோடு, பிரிவை அதன் புறக்கணிப்போடு, அடக்குமுறையை அதன் தீவிரத்தோடு சொல்லிச்செல்பவை. வாசிப்பவரை பார்வையாளராகவும் பங்கேற்பாளராகவும் மாற்றி மாற்றி சுழலவைப்பவை. சிறு ரொட்டியால் உலகை வரையறை செய்யும், வார்த்தைகளை கோடரியாக்கி காலத்தை விறகாக வெட்டும், நாளையை அரியணையாக்கி கவிதையை அரசனாக்கும் அற்புதம் அதோனிஸ்.
அரபுக் கவிதையின் நீரூற்றை எந்த இடையீடுமில்லாமல் அப்படியே தமிழில் அள்ளிப்பருகும்படி கச்சிதமான மொழிபெயர்ப்பு உதவுகிறது. அரபியிலிருந்து நேரடியாகத் தமிழில் பெயர்த்திருக்கும் ஜாகிர் ஹுசைன் பாராட்டுக்குரியவர்.
சமகாலத்தில் உலகளவில் இயங்கிக்கொண்டிருக்கும் பெருங்கவிஞர்களில் ஒருவரான அதோனிஸின் கவிதைகள் தமிழுக்கு வளம் சேர்க்கும், குணம் சேர்க்கும்.

Author: அதோனிஸ்
Translator: அ. ஜாகிர் ஹுசைன்
Genre: கவிதைகள்
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 978-93-7577-906-3