
பழைய துர்தேவதைகளும் புதிய கடவுளரும்
Regular price
Rs. 450.00
Sale priceRs. 405.00
Save 10%
/
- தொகுப்பு : தென்சின் டிகி
- In stock, ready to ship
- Backordered, shipping soon
அரசியல் ஆக்கிரமிப்புகள், நாடுகடத்தப்படல்களின் காரணமாகப் புதிய மொழிகள், தொழில்கள், வாழ்க்கைமுறைகள் என கண்டங்கள் நெடுகிலும் சிதறுண்டுகிடக்கும் திபெத்தியர்களுக்குரிய பொதுவான ஒரு தனித் தன்மையை இன்றைய காலகட்டத்தில் நம்மால் எவ்வாறு ஒன்றுதிரட்ட இயலும்?அனுபவங்கள் மீதான தன் பேரார்வத்தாலும் கூர்மையான கவனக் குவிப்பாலும்
''பழைய கடவுளரும் புதிய துர்தேவதைகளும்' எனும் இந் நூல் இந்தக் கேள்விக்கான பதிலை முகிழச் செய்கிறது. உடமைகளின் நிச்சயமற்ற தன்மையைக் கருவாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ள இக் கதைகள் யாவுமே, இவ்வுலகின் தந்திரங்கள் குறித்த பகடியை, உலகியல் ஞானத்துடனும் பரிவுடனும் தமக்கேயுரிய புதிய பாணியில் நுண்ணிய ஆராய்ச்சிக்கு ஆட்படுத்தியுள்ளன. புனிதப் போர்வை உடுத்தியிருக்கிற தேசியவாதத்தினுடைய இரும்புச் சக்கரங்களின் பற்களில்
சிக்கிக்கொள்ளவோ, மதங்கள் கட்டமைத்துள்ள பாரம்பரியங்களின் பக்கம் சாய்ந்துவிடவோகூடாது எனும் முடிவுடன், பல்வேறு விதமான மனிதர்களை, அவர்களின் ஆசைகளை அரவணைத்துப் புரிதலுடன் எழுதப்பட்டுள்ள இந்தக் கதைகள், கற்பனைக் கோட்பாடுகள் அனைத்தையும் உயிர்த்தெழச் செய்துள்ளன. எதிர்காலம் என்கிற ஒன்றை உலகம் முழுமைக்கும் சாத்தியமாக்குகிற இவை தான், திபெத்திற்கும் அதைத் துலங்கச் செய்கின்றன.
Author: தொகுப்பு : தென்சின் டிகி
Translator: கயல்
Genre: நவீன இந்திய கிளாசிக் சிறுகதைகள்
Language: தமிழ்
Type: Paperback