ஒரு தேசத்திற்கான கடிதங்கள் (ஜவஹர்லால் நேருவிடமிருந்து அவருடைய முதல் அமைச்சர்களுக்கு… 1947-1963)
- ஜவஹர்லால் நேரு : தொகுப்பு:மாதவ் கோஸ்லா
- In stock, ready to ship
- Backordered, shipping soon
1947 அக்டோபரில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம அமைச்சராக வந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜவஹர்லால் நேரு நாட்டின் மாகாண அரசுகளின் தலைவர்களுக்கு அவருடைய இருவாரக் கடிதங்களின் முதல் கடிதத்தை எழுதினார்--- அவருடைய மறைவுக்கு ஒரு சில மாதங்கள் வரை அவர் பாதுகாத்த ஒரு மரபு. கவனமுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தத் திரட்டு, குடியுரிமை, போரும் அமைதியும், சட்டம் ஒழுங்கு, தேசியத் திட்டமிடலும் வளர்ச்சியும், ஆட்சிமுறையும் ஊழலும் மற்றும் உலகில் இந்தியாவின் இடம் ஆகியவற்றையும் சேர்த்து, ஒரு வரையறைக்குட்பட்ட கருப்பொருள்களையும், பேசுபடு பொருள்களையும் உள்ளடக்குகிறது. இந்தக் கடிதங்கள், மிக முக்கியமான உலக நிகழ்வுகளையும், விடுதலைக்குப் பிறகு பதினாறு ஆண்டுகளில் நாடு எதிர்கொண்ட பல நெருக்கடிகளையும், மோதல்களையும் கூட உள்ளடக்குகின்றன. தொலைநோக்குடைய, பாண்டித்யம் மிக்க, சிந்தனை வயப்பட்ட இந்தக் கடிதங்கள், நமது தற்கால பிரச்சினைகளுக்கும், இக்கட்டான நிலைமைகளுக்கும் அவை அளிக்கும் வழிகாட்டுதலுக்கான, மிகப்பெரும் சமகாலத்திய பொருத்தப்பாடும் கொண்டவை.
Author: ஜவஹர்லால் நேரு/ தொகுப்பு: மாதவ் கோஸ்லா
Translator: நா. வீரபாண்டியன்
Genre: கட்டுரை
Language: தமிழ்
Type: Paperback