நேர்படப் பேசு: மால்கம் X கற்பித்த பேச்சாற்றல் - விவாதக் கலை ஒரு நுட்பக் கையேடு
- மால்கம்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
நான் இப்போதுதான் மால்கம் X-ஸை தொலைக்காட்சியில் பார்த்தேன், என்னால் அதை மறுக்க முடியாது. கறுப்பின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிப் பற்றி அவர் பேசத் தொடங்கும்போது, வெறுப்புணர்வும், அவரோடு என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் உணர்வும் ஏற்படுவதை உணர்கிறேன்.
- மார்ட்டின் லூதர் கிங், குடியுரிமைப் போராளி
சிறைச்சாலையில் விவாதக் கலைக்கு அறிமுகமான சில ஆண்டுகளிலேயே, நாட்டின் மிகவும் மதிக்கப்படும் விவாத விற்பன்னராக மால்கம் X உருவெடுத்தார். அரசியல்வாதிகள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் என கறுப்பரோ வெள்ளையரோ, எவராக இருந்தாலும் அவர்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்டவராகத் திகழ்ந்தார். அவருடைய பேச்சுநடை அலங்கார வார்த்தைகளின்றி, அம்பு போல் நேரடியானது. அவர் பயன்படுத்திய உருவகங்களும் சொல்லாட்சிகளும் மிகவும் எளிமையானவை, சாதாரண மக்களின் அன்றாட அனுபவங்களில் வேரூன்றியவை.
- ஜார்ஜ் பிரைட்மேன், ஆய்வாளர்
கசப்பான அனுபவங்களால் விளைந்த புத்திசாலித்தனமான நகைச்சுவை உணர்வும், வியக்கத்தக்க அறிவாற்றலும் கொண்ட வசீகரிக்கும் துடிப்பான பேச்சாளர் மால்கம் X. அவரிடம் ஓர் ஈர்ப்பு சக்தி இருந்தது. தங்கள் மீதும், தங்களுடைய முன்னோர்கள் மீதும் கறுப்பின மக்கள் பெருமிதம் கொள்ள அவர் உந்துதலாக இருந்தார்.
- இர்விங் ஜே. ரீன், தொடர்பியல் அறிஞர்
மால்கம் X மேடைக்கு வந்த முதல் நான்கு அல்லது ஐந்து நிமிடங்களுக்கு அவரால் பேசவே முடியாது; அந்த அளவுக்கு மக்கள் ஆரவாரம் செய்து புகழ் முழக்கங்களை எழுப்புவார்கள்.
-மாயா ஆஞ்சலோ, கவிஞர்
Author: மால்கம்
Genre: கட்டுரை
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 9789375770152