
கூடங்குளம் அணுமின் திட்டம்
- பூவுலகின் நண்பர்கள்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
கடந்த சில ஆண்டுகளாக நாம் கண்டுவரும் இயற்கை நிகழ்வுகள் அனைத்துமே கடுமையான அச்சத்தை ஏற்படுத்தும் புதிய அபாயங்களை நம்மிடம் விட்டுச் சென்றுள்ளன. அணு உலையின் செயல்பாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கப்போகும் நிகழ்வுகள் அதன் நான்கு சுவர்களுக்குள் நடப்பவை அல்ல, அவையாவும் அவற்றுக்கு வெளியில்தான் நடந்தேறுகின்றன அணுமின்சார உற்பத்தி என்பது வெற்றிடத்தில் நடக்கும் ஒரு நிகழ்வல்ல என்பதை மனதில் நிறுத்தவேண்டும். இயற்கை அழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் ஒவ்வொரு நொடியும் உள்ளது என்பதை நாம் மறக்கலாகாது. புயல், பூகம்பம், நெருப்பு, சுனாமி மற்றும் போன்ற அபாயங்கள் அதற்கு என்றும் உள்ளன. ஆகவே புதிதாக அணு உலை ஒன்றை நிறுவும்போது , இயறக்கையால் ஏற்படவுள்ள அனைத்து உச்சகட்ட அபாயங்களையும் கருத்தில் கொண்டே அதன் பாதுகாப்பு கட்டமைப்புகளை அதன் வடிவமைப்பாளர்கள் தீர்மானிக்க வேண்டும்.
Author: பூவுலகின் நண்பர்கள்
Genre: சுற்றுச்சூழலியல்
Language: தமிழ்
Type: Paperback