பட்ட விரட்டி
- காலித் ஹுசைனி
- In stock, ready to ship
- Inventory on the way
பட்ட விரட்டி என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்ட இந்நூல் ஆப்கானிய- அமெரிக்கரான காலித் ஹூசைனியால் எழுதப்பட்ட முதல் புதினம். ஒரு ஆப்கானியரால் முதன் முதலில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட புதினம் என்கிற சிறப்பையும் பெற்றது இந்நூல்.
காபூலின் வசீர் அக்பர் கான் பகுதியைச் சேர்ந்த பாஷ்டூன் என்கிற இனத்தின் செல்வக் குடும்பத்தில் பிறந்த அமீர் என்கிற சிறுவனின் கதையைச் சொல்கிறது இந்நூல். அவனது சிறு பருவத் தோழனும் தந்தையின் ஹசரா இனத்தைச் சேர்ந்த வேலையாளின் மகனுமான ஹசனுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகம் அமீருக்கு குற்ற உணர்வைத் தருகிறது. ஆப்கானிஸ்தான் முடியரசின் வீழ்ச்சி, சோவியத் படையெடுப்பு, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமாக மக்கள் வெளியேற்றம், மற்றும் தலிபான் ஆட்சி எனும் அமளியான காலக்கட்டங்களில் இக்கதை கடந்து செல்கிறது..
Author: காலித் ஹுசைனி
Translator: யூசுப் ராஜா
Genre: நவீன உலக கிளாசிக் நாவல்
Language: தமிழ்
Type: Paperback