
இந்தியாவில் சாதிகள்
- டாக்டர் அம்பேத்கர் / Dr. Ambedkar
- In stock, ready to ship
- Backordered, shipping soon
இது அம்பேத்கர் எழுதிய முதல் நூல் என்பதால் மட்டுமல்ல; அதன் உள்ளடக்கம் காரணமாகவும் முக்கிய நூலாக விளங்குகிறது. அவரின் பிற்கால அரசியல் செயற்பாடுகளின் செயற்களமாகவும், ஆய்வுச் சிந்தனைகளாகவும் அமைந்த சாதி மறுப்பு அரசியலின் தொடக்கமாக இந்நூலே அமைந்துள்ளது. அவரின் கோட்பாடு மற்றும் அரசியல் பங்களிப்பாக விளங்கும் சாதி ஒழிப்பு என்ற கருத்தியலின் விவாதப்புள்ளியை இந்நூலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும். சாதிஒழிப்பு என்கிற அரசியல் முடிவை இந்நூலில் அவர் அறுதியிட்டுக் கூறவில்லையெனினும், அதை ஒழிக்க முடியும் என்கிற நம்பிக்கையை அவர் அடைவதற்கான காரணமாக சாதியை அவர் புரிந்து கொண்டிருந்த விதம் இந்த நூலிலேயே காணக்கிடக்கிறது. அந்தவகையில் இது ஒரு முழுமையான ஆய்வு நூல்.
Author: டாக்டர் அம்பேத்கர் / Dr. Ambedkar
Genre: கட்டுரை / அரசியல் / Essays
Language: தமிழ்
Type: Paperback