அ. உமர் பாரூக்

    Filter

      ஆங்கில மருத்துவத்தின் இரத்தவியல் துறையில் கல்வியையும் பணியையும் துவங்கி, அக்குபங்சர் மற்றும் உளவியலில் பட்ட மேற்படிப்பை நிறைவு செய்தவர் அ.உமர் பாரூக். உணவு, உடல், மருத்துவம் குறித்து இவர் எழுதிய 31 கட்டுரை நூல்களும், கவிதை, சிறுகதை, நாவல் என 13 நூல்களும் வெளிவந்துள்ளன. இவற்றில், சில நூல்கள் மலையாளம், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அழகப்பா பல்கலைக்கழகத்தின் அக்குபங்சர் இணைப்புக் கல்லூரியின் முதல்வராகவும், தமிழ்ப் பல்கலைக்கழக அக்குபங்சர் பாடத்திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.

      தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அறம் கிளையின் செயலாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். தொல்லியல் அறிஞர் செந்தீ நடராசன் மற்றும் செம்பவளம் ஆய்வுத்தளத்தின் மாணவர். தொல்லியல் கழகத்தின் உறுப்பினராகவும் செயல்படுகிறார். அறம் கிளையின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வெட்டியல் பயிற்சிகளை நடத்தி வருகிறார்.

      21 products