
தேவதையின் மச்சங்கள் கருநீலம்
Regular price
Rs. 150.00
Sale priceRs. 135.00
Save 10%
/
- கே ஆர். மீரா
- In stock, ready to ship
- Backordered, shipping soon
“மிகவும் விசித்திரமான ஒரு காதல் அனுபவத்தைத்தான் நான் விவரிக்கப்போகிறேன். ஒரு விசயத்தை முன்பே சொல்லிவிடுகிறேன். சதி சாவித்திரிகளும் கண்ணியமான உத்தமபுருஷர்களும் இதை
வாசிக்காதீர்கள். வாசித்தால் ஏற்படக்கூடிய ஒழுக்க மீறல்களுக்கு நான் பொறுப்பல்ல.” என்று அதிர்ச்சியூட்டும் அறிவிப்புடன் தொடங்குகிறது ‘கருநீலம்’. எல்லாவகைப்பட்ட ஒழுக்கங்களையும் சுமந்துகொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் அவை எதுவும் தன்னிடம் இல்லாமல் போன நிலையிலும் தனக்குள் ஒரு அழகான வாழ்க்கையை எழுதிக்கொள்ளத் துடிக்கும் பெண்ணின் மாயப் புன்னகையையும் அவல வாழ்க்கையின் உச்சத்தில் நிர்கதியாகும் இரண்டு பிஞ்சுகளின் கண்ணீரையும் வாசகர் மனதில் மாறாத் துயரமாய் எழுதிச்செல்கிறது ‘தேவதையின் மச்சங்கள்’. கே.ஆர். மீராவின் எழுத்தில் –
மொழியில் கலைநேர்த்தியோடு இரு புனைவுகளும் உயிர்பெறுகின்றன.
Author: கே ஆர். மீரா
Translator: மோ. செந்தில்குமார்
Genre: குறுநாவல்கள்
Language: தமிழ்
Type: Paperback