தீர்க்கதரிசியின் பாடல்
- பால் லின்ச்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
தீர்க்கதரிசியின் பாடல் - இருபத்தோராம் நூற்றாண்டின் மிகச்சிறந்த 100 புத்தகங்களில் ஒன்றாக தி ஐரிஷ் டைம்ஸ் இதழால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்.
"தீர்க்கதரிசனம் மிக்க ஒரு மாபெரும் படைப்பு." — ரான் சார்லஸ், வாஷிங்டன் போஸ்ட்.
------------------------------
டப்ளினின் ஓர் இருண்ட மழைப் பொழுது. விஞ்ஞானியும் நான்கு குழந்தைகளின் தாயுமான ஐலிஷ் ஸ்டாக் தன் வீட்டுக்கதவு தட்டப்படும் ஓசைகேட்டுத் திறக்கிறாள். அங்கே அயர்லாந்தின், புதிதாக உருவாக்கப்பட்ட ரகசிய காவல்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் நிற்கிறார்கள். தொழிற்சங்கவாதியான இவளது கணவனை விசாரணை செய்வதற்காக அவர்கள் வந்திருக்கிறார்கள்.
சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் ஓர் அரசின் பிடியில் சிக்கி அயர்லாந்து நிலைகுலைந்து கொண்டிருக்கிறது. தனக்குத் தெரிந்த வாழ்க்கையும், தான் நேசிக்கும் மனிதர்களும் தன் கண் முன்னாலேயே காணாமல் போய்க் கொண்டிருப்பதைக் காணும் ஐலிஷ், அழிவை நோக்கிச் செல்லும் தனது புதிய நாட்டின் சர்வாதிகாரப் போக்கை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறாள். தன் குடும்பத்தைக் காப்பாற்ற இவள் எவ்வளவு தூரம் செல்வாள்? யாரை அல்லது எதை அந்தப் பாழ்நிலத்தில் விட்டுச்செல்லத் துணிவாள்?
Author: பால் லின்ச்
Translator: சசிகலா பாபு
Genre: நவீன கிளாசிக் நாவல்
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 9789375773559