தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவிட்டு, பின் விலகி ஊடகத்துறைக்குள் நுழைந்தவர். அகில இந்திய வானனொலியின் காரைக்கால் பண்பலையில் சிறிதுகாலம் அறிவிப்பாளராகவும் இருந்தார். ‘புதிய தலைமுறை’ ‘ஆனந்தவிகடன்’, ‘இந்தியா டுடே’, ‘காட்சிப்பிழை’, ‘குங்குமம் தோழி’ போன்ற அச்சு இதழ்களில் பணியாற்றிய இவர் தற்போது சுயாதீன ஊடகவியலாளராக இருக்கிறார். சென்னையில் வசிக்கிறார்.
தொடர்ந்து நாடகத்துறையில் அரங்கக் கலைஞராகவும் இசைப்பாடகராகவும் இயங்கிவருகிறார். பேரா. காஞ்சா அய்லய்யாவின் நேர்காணல் இவருடைய மொழியாக்கத்தில் ‘இந்து ஆன்மிகமே பாசிசம்தான்’ என்கிற தலைப்பில் சிறுநூலாக வெளியிடப்பட்டது. ‘பேராயுதம் மௌனித்தபொழுதில்’ என்ற கவிதைத் தொகுப்பும், சாதியமும் மதவாதமும் குறித்து எழுதிய ‘சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்’, ஆளுமைகள் குறித்து எழுதப்பட்ட ‘கலைஞர்கள் - படைப்பாளிகள் - சாட்சியங்கள்’ என்ற கட்டுரைகளின் த ொகுப்பும், இவர் செய்த ‘அப்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?’ என்ற நேர்காணல்களின் த ொகுப்பும் இதுவரை வெளியாகி இருக்கின்றன.