கதைகள்
- அரிசங்கர்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
இன்னும்கூட சற்று மேம்பட்ட நிலையில் இருந்திருக்கலாம் என்ற ஏக்கமும் அதே நேரத்தில் அந்நிலையை அடைய முடியாததன் பொருட்டெழும் குற்றவுணர்வும் கொண்ட, அன்றாடத்தின் நெருக்கடியில் கைவிடப்பட்ட பெருநகர மனிதர்களை இக்கதைகளில் அதிகம் காணலாம். இவர்களின் தவிர்க்கவியலாத யதார்த்தமாக ஏமாற்றமும் தனிமையுமே இருக்கின்றன. போலியான அன்பெனும் புதிர்ச் சுவர்களுக்குள் சிக்கிக்கொண்ட இவர்களைக் காக்கும் மீட்சிக் கீற்றுக்கும் ஆயுள் அதிகமில்லை. வடிவ ரீதியிலும் கதை சொல்லும் முறைமையிலும் சோதனை முயற்சிகளைக் கொண்ட கதைகள் சில இத்தொகுப்பில் உள்ளன. மனித மனத்தின் தொட இயலாத ஆழங்களைத் தொட்டுப் போவதற்கு அக்கதைகளில் அரிசங்கர் யதார்த்த மீறலை உத்தியாகக் கையாண்டிருக்கிறார். அவை கதைகளில் பொருத்தமாகவும் வெளிப்பட்டுள்ளன.
கார்த்திக் பாலசுப்ரமணியன்
Author: அரிசங்கர்
Genre: சிறுகதைகள்
Language: தமிழ்
Type: Paperback