
கொடக்கோனார் கொலை வழக்கு
Regular price
Rs. 250.00
Sale priceRs. 187.50
Save 25%
/
- அப்பணசாமி
- In stock, ready to ship
- Backordered, shipping soon
நாவல் நிகழும் நிலத்தின் பண்புகளை மாற்றவில்லை. பண்பாட்டு மரபைச் சிதைக்கவில்லை. நிறைய வரலாறு பேசினாலும் இது சமகால நாவல். சமகாலத்தில் எழுப்பப்பட்ட சில கேள்விகளின் முடிச்சுகளைத் தேடிய கலைப்பயணம். நாடகக் காதல் என்று சொல்கிறார்கள் இல்லையா? நான் சில காதல் நாடகங்களை உருவாக்கியிருக்கிறேன். பிறந்த மதத்துக்குத் திரும்புதல் என்கிறார்கள். பிறப்பில் மதம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறேன். ஆனால் இவற்றை நாவலில் வலை போட்டுத் தேடினாலும் கிடைக்காது. ஏனென்றால் நாவல் ‘கொடக்கோனார் கொலை வழக்கு’ குறித்து மட்டுமே பிரஸ்தாபிக்கிறது. இதில் கொலையாளிகளே விசாரணை அதிகாரிகளாக உள்ளனர். புரிகிறவர்கள் புரிந்து கொள்ளுங்கள்!
Author: அப்பணசாமி
Genre: நாவல்
Language: தமிழ்
Type: Paperback