வாதனை
வாதனை

வாதனை

Regular price Rs. 299.00 Sale priceRs. 270.00 Save 10%
/

  • Free worldwide shipping
  • In stock, ready to ship
  • Backordered, shipping soon

Pre-Order

This book will be released by the Second week of November, 2026


இந்தக் கதையின் களம் நம்மைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்விலிருந்து உருவானது. நீங்களும் நானும் கூட அதன் பாத்திரங்கள்தாம். இந்தக் கதைமாந்தர்களை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஏனெனில், பல தருணங்களில் இது உங்களுடைய கதையாகவும் இருக்கக்கூடும். நம் ஒவ்வொருவருக்கும் இந்தப் பாத்திரங்களோடு நம்மைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள ஏதோவொரு தருணம் வாய்க்கிறது. முகமறியாத, எவ்விதத் தொடர்புமற்ற எளிய மனிதர்களின் மீது அதிகாரம் கொண்டவர்களுக்கு ஏன் இத்தனை கடுங்கோபம்? அதிகாரத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளும், அடையாளமும் பெயருமற்ற, தோல்வியுற்ற ஒருவனுக்கு நாம் எவ்வாறு ஆறுதல் அளிப்பது? அவனது துயரத்தை எப்படிப் பகிர்ந்துகொள்வது? 

தோல்வியாளர்கள் விளிம்புநிலையினர், ஆதரவற்றவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டாலும், அவர்கள் விடாமுயற்சி மிக்கவர்கள். நீதியை நோக்கி அவர்கள் ஓடிக்கொண்டிருந்த பாதையை, தங்களைச் சூழ்ந்திருந்த இடர்களின் களைப்புக்காக ஒருபோதும் கைவிட்டதில்லை. அவர்கள் கடந்து வந்த பாதை அத்தனை கடினமானது; இத்தகைய எளிய மனிதர்கள் பல தருணங்களில் என்னைப் போன்றவர்களுக்கு நம்பிக்கையூட்டியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள என்னிடமும் உங்களிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்வின் வழியே உணர்த்திச் செல்லும் பாடங்களை நாம் உள்வாங்கிக்கொண்டால், அவை நம்மை இன்னும் மேம்பட்ட மனிதர்களாக மாற்றக்கூடும்.

இத்தகைய மனிதர்கள் நம்மைச் சுற்றியுள்ள எல்லா வெளிகளிலும் நிறைந்திருக்கிறார்கள். ஒருவேளை, நாமும்கூட அவர்களில் ஒருவராக இருக்கலாம். ஆனால், நாம் அறிந்திருக்கும் ஒவ்வொரு கதைக்குள்ளும், இதுவரை அறியப்படாத பக்கங்கள் பல மறைந்திருக்கின்றன. அந்தப் பக்கங்களை வாசகர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

 

Author: ச. பாலமுருகன் 

Genre: நாவல்

Language: தமிழ்

Type: Paperback

ISBN: 9789375770602

Use collapsible tabs for more detailed information that will help customers make a purchasing decision.

Ex: Shipping and return policies, size guides, and other common questions.

This site is protected by hCaptcha and the hCaptcha Privacy Policy and Terms of Service apply.

You may also like


Recently viewed