மண்ட்டோ படைப்புகள்
- சாதத் ஹசன் மண்ட்டோ
- In stock, ready to ship
- Inventory on the way
விலைமாதுகள் பற்றி எழுதுவதே ஆபாசம் என்றால் அவர்களின் இருப்பும் ஆபாசமானதுதான். அவர்களைப் பற்றி எழுதுவதைத் தடைசெய்வதை விரும்பினால் முதலில் அவர்களை ஒழித்துக்கட்டுங்கள். பிறகு, அவர்களைப் பற்றி எழுதுவது தானாக மறைந்துவிடும்..ஒரு விலைமாதுவின் வீடு என்பது இந்தச் சமூகம் தன்னுடைய முதுகில் சுமந்துகொண்டிருக்கும் பிணம்தான். இந்தச் சமூகம் அதை ஏதோ ஒரு இடத்தில் புதைக்கும்வரை அதைப் பற்றியான விவாதங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
நான் பன்னிரண்டு வருடங்களாக பம்பாயில் தங்கியிருந்தேன், நான் இன்று என்னவாக இருந்தாலும் அது நான் பம்பாயில் கழித்த நாட்களால் உருவாக்கப்பட்டதுதான். நான் இன்று பாகிஸ்தானில் வாழ்ந்துகொண்டிருக்கலாம், நாளை நான் வேறு எங்கேனும் வாழ்வதற்காகப் போகலாம். ஆனால், நான் எங்கு சென்றாலும் பம்பாய் என்னை உருவாக்கியதுபோலவே நான் என்றும் இருப்பேன். நான் எங்கு வாழ்ந்தாலும் பம்பாயை என்னுடன் சுமந்துசெல்வேன். நான் பம்பாயை விட்டுக் கிளம்பியபோது அதற்காக வருத்தப்பட்டேன். அங்குதான் என் வாழ்க்கையில் நிலைத்திருக்கக்கூடிய பல நட்புகளை உருவாக்கிக்கொண்டேன். நான் பெருமைப்படக்கூடிய நட்புகள்! அங்குதான் நான் மணம்புரிந்தேன். அங்குதான் என் முதல் குழந்தை பிறந்தது. என் இரண்டாவது குழந்தை தன்னுடைய முதல் நாளை அங்குதான் தொடங்கினாள். பம்பாயில் ஒரு வேளை சோற்றுக்குக்கூட வழியில்லாமல் அவதிப்பட்ட காலங்கள் உண்டு. நிறையப் பணம் சம்பாதித்து அதைச் செலவழித்து வாழ்ந்ததும் உண்டு. நான் அந்த நகரத்தை நேசித்தேன். அந்த நகரத்தை இன்றும் நேசிக்கிறேன்.
முன்னர் நான் ஒன்றுபட்ட இந்தியாவின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருந்தேன். இப்போது நான் பாகிஸ்தானின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளனாக இருக்கிறேன்.
- சாதத் ஹசன் மண்ட்டோ
Author: சாதத் ஹசன் மண்ட்டோ
Translator: சீனிவாச ராமாநுஜம்
Genre: உலக கிளாசிக் சிறுகதைகள்
Language: தமிழ்
Type: Hard Bound