நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்
Regular price
Rs. 100.00
Sale priceRs. 90.00
Save 10%
/
- சிமமந்தா எங்கோஸி அடிச்சி
- In stock, ready to ship
- Backordered, shipping soon
நவீன பெண்ணியம், பாலினச் சமத்துவம் பற்றி சிமாமந்தா எங்கோஸி அடிச்சி அளித்துள்ள செறிவான கட்டுரை.
மாறுதலடைந்த ஒரு உலகம் பற்றிக் கனவு காணவும் திட்டமிடவும் நாம் தொடங்கிவிட்டோமா எனக் கேட்க விரும்புகிறேன். நன்மை நிறைந்த உலகம். தங்களுக்குத் தாங்களே மிக உண்மையாக இருக்கக்கூடிய மகிழ்ச்சி நிறைந்த ஆண்களையும் பெண்களையும் கொண்ட உலகம். நம்முடைய பெண்மக்களை மாறுபட்ட பண்புள்ளவர்களாக வளர்ப்பதிலிருந்துதான் அந்த உலகம் தொடங்குகிறது. நம்முடைய மகன்களையும் அவ்வாறே மாறுபட்டவர்களாக வளர்க்க வேண்டும்.நம் காலத்திய பெண்ணியத்தின் பொருளென்ன?தன் வாழ்பனுவங்களை அடிப்படையாக வைத்து, விரிவான வாதங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுரை TEDx உரை வரிசையில் இதே தலைப்பில் சிமமந்தா அளித்த கட்டுரையை விரிவாக்கம் செய்து எழுதப்பட்டுள்ளது. உள்ளடக்கும் தன்மைமையையும் விழிப்புணர்வையும் அடிப்படையாகக் கொண்ட இருபத்தோராம் நூற்றாண்டிற்றிற்கான பெண்ணினத்தின் தனித்தன்மை கொண்ட வரையறையை இக்கட்டுரை வாசகர்களுக்கு அளிக்கிறது.
நம் காலத்தில் ஒரு பெண்ணாக இருப்பது என்றால் என்ன என்பதைத் தன் வாழ்வனுபவங்களையும் உருமறைத்த பாலரசியலின் மெய்நடப்புகளையும் ஆய்ந்த சிறப்பான ஓர் எழுத்தாளரால் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை நாம் அனைவரும் ஏன் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகிறது.
Author: சிமமந்தா எங்கோஸி அடிச்சி
Translator: பிரேம்
Genre: அபுனைவு/ பெண்ணியம்
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 978-93-48598-77-6