சிறைவாசம்: பீமா கோரேகான் வழக்கும் இந்திய மக்களாட்சியைத் தேடும் படலமும்
- அல்பா ஷா
- In stock, ready to ship
- Backordered, shipping soon
இந்தியக் குடியரசில் மூடி மறைக்கப்பட்ட கொடூரமான ஒரு நிகழ்வின் உண்மையை இந்த நூல் தோலுரித்துக் காட்டுகிறது. பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனித உரிமைப் போராளிகள் 16 பேர் (பீ.கோ.16) மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று பெயர் சூட்டப்பட்டு, எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் கற்றறிந்த பேராசிரியர்களாக, வழக்கறிஞர்களாக, இதழியலாளர்களாக, கவிஞர்களாக பல பொறுப்பான பணிகளில் உள்ளவர்கள்.
எந்த அளவு குடியாட்சி முறைகள் முழுவதுமாக நசுக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டன என்பதை இந்த நூல் மூலம் ஆசிரியர் முழுமையாக நிரூபிக்கிறார். முதல்முறையாக நமது நாட்டின் நீண்ட வரலாற்றில் இத்தகைய பல்முனைத் தாக்குதல்களோடு, குடியாட்சியின் உரிமைகளைக் காக்கப் போராடுபவர்களை அரசு தாக்குவதை இந்த நூல் விளக்குகின்றது. பேச்சு சுதந்திரத்தை மட்டுமல்லாமல், உலகில் நிலவும் சமமின்மையை எதிர்க்கும் சமூக நலப் போராட்டங்களையும் காக்க வேண்டிய கடமை நமக்குள்ளது என்பதையும் தெளிவாக இந்நூல் நமக்குக் கற்பிக்கின்றது. அதனாலேயே இந்த நூல் மிக முக்கியமான ஒரு நூலாக உருப்பெறுகிறது.
Author: அல்பா ஷா
Translator: தருமி
Genre: அபுனைவு / அரசியல்
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 978-93-48598-53-0