சப்தங்கள்
- அரிசங்கர்
- In stock, ready to ship
- Inventory on the way
ஒருவர் குறித்த அனுமானங்களும் பிம்பங்களும் செயல் பாடுகளும் அவருக்கும் மற்றொருவருக்கமான உறவு முறையில், பழக்க வழக்க அடிப்படையில் மட்டுமில்லாது புறச்சூழல் என்கிற சமூக, பொது பார்வை என்னும் அளவீடுகள், அழுத்தங்கள் வழியாக கட்டமைக்கப்படுகின்றன. உதாரணமாக, அம்மா என்றால் அன்பு, கருணை, ஒழுக்கம், தியாகம் என்பதும் அப்பா என்றால் தூய்மை, வாய்மை, உத்தியோகம், உழைப்பு, நேர்மை என்பதும் இங்கே சொல்லப்படாத விழுமியங்களாகத் தோற்றம் கொள்கிறது.இப்படியானவர்கள் சற்று வழுவினாலும் தனி மனிதனின் "வெண்கொற்றக் குடையின் கீழ்..." கெட்டவர்களாக ஆக்கப்படுகிறார்கள். இதற்கு தனிமனித அளவுகள் மட்டும் பொறுப்பாகிறது என்று சொல்லிவிட முடியுமா என்ன? அரிசங்கர் கதைகள் 'வழு' தவறிய முறைகளை சொல்வதாக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தின் உயர்வு, தாழ்வு குறித்து பொருளாதார அடிப்படையில் உருவான மனநிலையை நமக்கு மறைமுகமாக தருகிறது. அரிசங்கர் கதையில் உலவும் மனிதர்கள் மிகையுணர்ச்சி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். உணர்ச்சி மேலிட செய்யும் சம்பவங்கள் யாவும், அசம்பாவிதங்களாக மாறுவதற்கான வாய்ப்பையும் காரணத்தையும் வெளிப்படுத்துகிறார் அரிசங்கர்.
வேல்கண்ணன்
Author: அரிசங்கர்
Genre: சிறுகதைகள்
Language: தமிழ்
Type: Paperback