கிழவனும் கடலும்
- எர்னெஸ்ட் ஹெமிங்வே
- In stock, ready to ship
- Backordered, shipping soon
கிழவனும் கடலும் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் தனித்துவமான படைப்பாகும். தனி ஒருவனாக மிகப் பிரம்மாண்டமான மெர்லின் மீனுடனான சாண்டியாகோவின் விடாப்பிடியான போராட்டத்தை அழகுறச் செதுக்கியுள்ள ஹெமிங்வே, மீனுடனான கிழவரின் பயணத்தின் ஊடே, ஈவிரக்கமற்ற கடலுடனான அவரின் போராட்டத்தையும் அதன் பல்வேறு கட்டங்களில் அவர் சந்திக்கும் மற்ற சிக்கல்களையும் விறுவிறுப்பான விவரணைகளுடன் சக பயணியாய் நம்மையும் படகில் ஏற்றிக் கொண்டு இந்நாவலுடன் பயணிக்கச் செய்கிறார்.
கிழவர் மீனைப் பிடித்தாரா? பிடித்த மீனை கரை சேர்த்தாரா? என்பதற்கு அப்பால் தனி ஒரு மனிதனின் விடாமுயற்சியையும், இயற்கை உடனான அவனின் சமரசமற்றப் போரையும், போரின் ஊடே உண்டாகும் அதனுடனான பிணைப்பையும், பிணைப்பின் ஊடே அவரின் கண்டடைவுகளையும் உணர்ச்சிப் பெருக்குடன் அழகுறச் செதுக்கியுள்ளார் ஹெமிங்வே.
Author: எர்னெஸ்ட் ஹெமிங்வே
Translator: விஜி
Genre: உலக கிளாசிக் நாவல்
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 978-93-48598-45-5