ஊழின் அடிமையாக: வேட்கை தணிக்கும் பெண்ணின் சுயசரிதை
- மரியா ரோஸா ஹென்ஸன்
- In stock, ready to ship
- Inventory on the way
இந்த நூல் ஒரு கொடுமையை எடுத்துச் சொல்கிறது.
கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பெண்கள், ஜப்பானிய
இராணுவத்தினர்களுக்குப் பாலியல் அடிமைகளாக
ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மரியா பாலியல் அடிமையான
போது அவரது வயது பதினாறு. இரண்டாம்
உலகப்போரின் போது நடந்த இந்தக் கொடூரத்தை
முதன்முதலாக வெளிக்கொணர்ந்தவர் பிலிப்பைன்ஸ்
தேசத்தைச் சேர்ந்த மரியா.
இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, பாலியல் அடிமை
ஆக்கப்பட்ட முதல்நாளே இருபத்து நான்கு படையினர்கள்
மரியாவை வல்லுறவு செய்கிறார்கள். அப்போது அவர்
பருவமடைந்திருக்கவில்லை. அதனால் ஜப்பானியருக்கு
இருந்த அனுகூலம் என்னவென்றால் மற்றப் பெண்களுக்கு
அளிக்கும், நான்கைந்து நாட்கள் மாதாந்திர விடுமுறையைக்
கூட அவருக்குத் தர வேண்டியதில்லை.
பல மாதங்கள், மரியா பாலியல் அடிமையாக
இருந்திருக்கிறார். அதற்குள் ஆயிரக்கணக்கான
ஜப்பானியப் படையினர்கள் அவரது உடலை பாலியல்
ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.
ஒருமுறை எதிர்பாராத பாலியல் வல்லுறவு நடந்தாலே
அந்தக் கொடுங்கனவுகள் வாழ்க்கை முழுதும் தொடர்ந்து
வருகின்றன என்று பாதிக்கப்பட்ட பெண்கள்
கூறியிருக்கிறார்கள். அவ்வாறெனில், இது போன்று நடந்த
பெண் அதில் இருந்து மீண்டுவர எவ்வளவு மனத்திடம்
வேண்டியிருக்கும்?!
Author: மரியா ரோஸா ஹென்ஸன்
Translator: எம். ரிஷான் ஷெரீப்
Genre: தன்வரலாறு
Language: தமிழ்
Type: Paperback