
ராஜேஷ் வைரபாண்டியன் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாயர்புரம் எனும் ஊரின் அருகேயிருக்கும் நடுவைக்குறிச்சியைச் சேர்ந்தவர். நிலாரசிகன் என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனங்களை 2018 வரை எழுதி வந்தார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் பல்வேறு இலக்கிய இதழ்களில் வெளியாகி வருகின்றன. இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு சிறார் நாவல், ஒரு நாவல் எழுயிருக்கிறார்.
இவரது 'வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி' கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான சுஜாதா விருதும், பிரமிள் விருதும் பெற்றது. ஈர்ப்பு விதியை (Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார். '361 டிகிரி', 'உதிரிகள்' ஆகிய இரு சிற்றிதழ்களின் ஆசிரியர்.