
முனைவர் சுப. உதயகுமாரன்
திருவனந்தபுரத்திலுள்ள கேரளாப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், அமெரிக்காவின் நோட்ரேடேம் பல்கலைக்கழகத்தில் அமைதிக் கல்வியில் இரண்டாவது முதுகலைப் பட்டமும், ஹவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியிருக்கிறார். தற்போது 'பச்சைத் தமிழகம்' கட்சியின் தலைவராகவும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இயங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் தென்கோடி நகரமான நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசிக்கிறார்.