
தருமபுரி மாவட்டத்தில் நவலை என்ற சிற்றூரில் பிறந்தவர். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். தமிழ், ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதுவதோடு சிறார்களுக்காகவும் எழுதுகிறார். இவருடைய கவிதைகள் ஆங்கிலம், பல்கேரியன், ஸ்பானிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இதழ்களில் வந்துள்ளன/வரவுள்ளன. மனைவி சுமதி, குழந்தைகள் பூவிதழ் சேகுவேரா, தூயநிலா ஓவியம். தற்போது மொரப்பூரில் வசிக்கிறார்.
சௌமா இலக்கிய விருது. படித்துறை இலக்கிய விருது, திருப்பூர் இலக்கிய விருது, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கியமேடை விருது, புன்னகை இலக்கிய விருது, எழுச்சித் தமிழர் இலக்கிய விருது, பிரமிள் கவிதை விருது (இலங்கை), தினைகள் கவிதை விருது, ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதை விருது (துளிர்) ஆகிய விருதுகள் பெற்றுள்ளார்.