பாலைவன லாந்தர்

    Filter

      பாலைவன லாந்தரின் இயற்பெயர் நலிஜத். இவர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் பிறந்தவர்.

      2010ஆம் ஆண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவருடைய முதல் கவிதை, 2015ஆம் ஆண்டு கல்கி இதழில் வெளியானது. 2016ஆம் ஆண்டு 'உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்' என்ற இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. தொடர்ச்சியாக சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

      சமூகநல செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பெரு நோய்த்தொற்று கொரானா காலத்தில் இவர் தயாரித்த 'ஊரடங்கு' என்ற விழிப்புணர்வுக் குறும்படம் கவனம் பெற்றது.

      ஜெர்மனியில் வசிக்கும் நிம்மி சிவா என்னும் எழுத்தாளரோடு இணைந்து உலகெங்கிலும் உள்ள இருபது பெண் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து. இவர் எழுதிய 'மனமே யுத்தம் செய்' என்னும் நெடு நீள விழிப்புணர்வுக் கவிதையை வாசிக்கச் செய்தார்.

      லாந்தர் ஆர்ட் எண்டர்டெய்ன்மெண்ட் (LANTHAR ART ENTERTAINMENT) என்னும் கலை இலக்கியச் செயற்பாட்டிற்கான தளம் ஒன்றை உருவாக்கி தொடர் நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.

      சிறுகதை

      மீளி

      கவிதைத் தொகுப்புகள்:

      உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்

      லாடம்

      ஓநாய்

      பெருந்தச்சன்

      World Class Sins

      நாவல்
       
      பெழச்சான்

      2 products