நிஜந்தன்

    Filter

      கோயம்புத்தூரில் பிறந்த நிஜந்தன் தொடக்கத்தில்
      இடதுசாரி அமைப்புகளோடு தன்னை இணைத்துக்கொண்டு
      செயல்பட்டுக் கொண்டிருந்தவர். மார்க்ஸியக் கோட்டுபாடுகள் சார்ந்து
      அபுனைவுகளை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்த இவர் ரஷ்ய
      இலக்கியங்கள் குறிப்பாக குப்ரின் எழுதிய ‘ஒலேஷ்யா’ நாவல்,
      எழுத்ததாளர் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவல்
      மூலமாக நவீன இலக்கியத்தின் அறிமுகத்தையும், புனைவுகளின்
      தேவையையும் உணர்ந்து அதன் பின்னாகத் தீவிர இலக்கிய
      வாசகராகவும் தன்னை மாற்றிக்கொண்டார். நூல்கள் குறித்த
      அறிமுகக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில்
      எழுதி வந்தவர். இவருடைய குறுங்கதைகள், சிறுகதைகள்
      ‘வாசகசாலை’, ‘நடுகல்’ போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.
      நக்கலைட்ஸ் என்ற You tube சேனலில் Script writer ஆக
      பணிபுரிந்த அனுபவமும் கொண்டவர்.

      ‘பிறழ்’ இவரின் முதல் நாவல்.

      2026, ஏப்ரலில் மறைந்தார். 

      1 product