
சென்னை தாம்பரத்தில் பிறந்தார். தனது இளமையில் தாம்பிராஸ். ஆர்எஸ்எஸ் இயக்கங்களை நோக்கி ஈர்க்கப்பட்டவர், பெரியார் அறிமுகம் கிடைத்ததும் சாதி மறுப்புத் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடலானார். தோழர் தியாகுவின் வழிகாட்டுதலில் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பரிணமித்தார். ஆங்கில அறிவியல் நூல்களைத் தமிழாக்கித் தந்தார். தமிழ்த் தேசியம், சாதி ஒழிப்பு, ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு, கல்வி சார்ந்து நூல்கள் பல எழுதியுள்ளார். 35 ஆண்டாகத் தமிழ்வழியில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசானாகத் திகழ்கிறார். ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்கு 'ஆங்கில ஆசான்' என்னும் நூலும் எழுதியுள்ளார்.
இவரது படைப்புகள்:
இடஒதுக்கீடு -தொடரும் விவாதம்
ஆங்கில மாயை
ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே!
ஆங்கில ஆசான்
சல்லிக்கட்டு -இன்றைய தேவை என்ன?
தந்தை பெரியார் - தமிழ்த் தேசிய அறிவியலர்
உறுப்பு 370-காஷ்மீரத்தின் உரிமை முறியா? அடிமைப் பொறியா?
யார் தமிழர்?
இந்தி எதிர்ப்பு - ஒரு வரலாற்றுப் படிப்பினை
தமிழ்வழிப் பள்ளி தேடிய ஓர் அப்பாவின் அனுபவம்
இந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு
அண்டத்தின் கதை
இவரது தமிழாக்கங்கள்:
காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய A Brief History of Time
இயந்திர அண்டம் அமெரிக்க கால்டெக் பல்கலைக்கழகம் 85 The Mechanical Universe
இந்திய இழிவு- அருந்ததி ராய் எழுதிய India's Shame