
ந. சிவநேசன் (1988)
சேலம் மாவட்டம் ஆரியபாளையம். அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர். கவிஞர் மற்றும் எழுத்தாளர். கவிதைகள் காலச்சுவடு, நடுகல், அகழ், ஆனந்தவிகடன், நீலம், கணையாழி, நுட்பம், குமுதம் தீராநதி, தி இந்து தமிழ்திசை உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.
கானங்களின் மென்சிறை, ஃ வரைகிறது தேனீ, இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை, மீன்காட்டி விரல் ஆகியவை கவிதை நூல்கள்.
இவருடைய கதைகள் பல்வேறு இலக்கிய இதழ்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.