கருணாகரன்

    Filter

      இலங்கையின் வடக்கே உள்ள இயக்கச்சி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் கருணாகரன். ஈழப்போராட்ட அமைப்புகளின் வெளியீடுகளான பொதுமை, வெளிச்சம் ஆகியவற்றின் ஆசிரியபீடங்களிலும் தொலைக்காட்சியிலும் பணியாற்றியவர். சுயாதீன ஊடகவியலாளராகச் செயற்பட்டு வருகிறார். கவிஞர்,. பத்தி எழுத்து, ஒளிப்படத்துறை (Photography) ஆகியவற்றிலும் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். இவர் எழுதியவற்றில் ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல், ஒரு பயணியின் நிகழ்காலக்குறிப்புகள்”, பலியாடு, எதுவுமல்ல எதுவும், ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள், நெருப்பின் உதிரம், “இரத்தமாகிய இரவும் பகலும் – படுவான்கரைக் குறிப்புகள்“ என இதுவரையில் ஏழு கவிதை நூல்களும் வேட்டைத்தோப்பு எனும் சிறுகதைத் தொகுப்பும் இப்படி ஒரு காலம் என்ற கட்டுரை நூலும் வெளியாகியுள்ளன. “இப்படி ஒரு காலம்“ என்ற நூல், "Wanni Mathaga” என்ற தலைப்பில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கு மேற்பட்ட நேர்காணல்களில் பல்வேறு ஆளுமைகளோடு இருபது ஆண்டுகளாக பல விடயங்களைக் குறித்தும் உரையாடியிருக்கிறார். அதில் ஒரு தொகுதி புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது.

      மின்னஞ்சல் – poompoom2007@gmail.com

      1 product