மன்னார் பேசாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.ஏ.உதயன் இலங்கையின் தேசியக் கலைஞராக இலங்கை அரசால் பிரகடனப்படுத்தப்பட்டவராவார். நாடக அரங்கியலில் அதிக கவனம் செலுத்தும்.இவர் ஒரு ஓவிய ஆசிரியராகவும் பணி புரிகின்றார்.
ஈழத்து நாவலாசிரியர்களில் பிரபல்யமான இவரின் ஒன்பதாவது நாவலாக இந்த கப்பித்தான் திகழ்கின்றது. இவரது எல்லா நாவல்களுமே வாசகர்களின் சிறப்பான கவனிப்பைப் பெற்றதுடன் அவை பல விருதுகளையும் பெற்றிருக்கின்றன.இவரது நாவல்களுக்காக மூன்று முறை இலங்கையின் இலக்கிய உயர் விருதான சாகித்திய விருதினையும் கொடகேயின் தேசிய சாகித்திய விருதினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 product
Sale
Quick View