
தஞ்சாவூரில் பிறந்து சிங்கப்பூரில் வசித்து வருகிறார். ஆறு கவிதைத் தொகுப்புகளும், ஒரு சிறுகதைத் தொகுப்பும், மூன்று தொகுப்பு நூல்களும் வெளிவந்துள்ளன. அயலகத் தமிழ்க் கவிதை நூலுக்கான தமிழக அரசு விருது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கரிகாற்சோழன் விருது, பொதிகைத் தமிழ்ச்சங்கத்தின் கவிதை நூல் பரிசு, சிங்கப்பூர் கவிமாலையின் தங்கப்பதக்க விருது ஆகியவற்றோடு தேசியக் கலை மன்றத்தின் தங்கமுனை விருதும் பெற்றுள்ளார். 2022இல் இலக்கியப் பரிசினை இவரது லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள் நூல் பெற்றது. 2024ஆம் ஆண்டு கடல் நாகங்கள் பொன்னி குறும்பட்டியலில் இடம்பெற்றது. தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் இவர் சிங்கப்பூர்த் தமிழ்க் கவிஞர் இயக்கமான கவிமாலையின் தலைவர் மற்றும் திணைகள்.காம் தளத்தின் நிர்வாக ஆசிரியர்.