கே.ஆர். மீரா

    Filter
      கே.ஆர். மீரா சமகால மலையாள எழுத்துலகில் தவிர்க்க முடியாத பெண் சக்தியாக உருவெடுத்திருக்கிறார். ஒவ்வொரு படைப்பிலும் வலிமையான, தனித்துவமான, வகைமாதிரியான பெண் கதைப் பாத்திரங்களை படைத்து, அவர்களைச் சுயமரியாதையுடனும் அறிவுக் கூர்மையுடனும் உலவவிடுகின்றார். ஆணாதிக்கத்தை நொறுக்கி அழிக்கும் பாலின சமத்துவம் மட்டுமல்ல ஏற்றத்தாழ்வற்ற சமூகம், சுயமரியாதையான வாழ்க்கை அனைத்தையும் இந்த மண்ணிலேயே சாத்தியப்படுத்த முடியும் என்பதை ஆணி அறைந்தாற்போன்று வாசகர் மனதில் பதியவைப்பவை இவரது படைப்புகள்.
       
      சாகித்ய அகாதெமி விருது முதலான தேசிய அங்கீகாரம்பெற்ற படைப்புகளுக்குச் சொந்தக்காரியான கே.ஆர். மீராவை வார்த்தைகளுக்குள் அடங்காத ஓர் அபூர்வமான படைப்புச் சக்தியாக அவரது எந்த ஒரு படைப்பை வாசிப்பவரும் உணர்வார்.
       
      இவர் தற்போது தனது கணவர் திலீப், மகள் ஸ்ருதியுடன் கோட்டயத்தில் வசித்துவருகிறார்.