யாரும் போகாத பாதை: ஐரோப்பியச் சிறுகதைகள்
- In stock, ready to ship
- Backordered, shipping soon
வரலாற்றிலும் சரி, புனைவுகளிலும் சரி, ஐரோப்பா எப்போதும் தனக்கான அடையாளத்தைத் தேடியவாறே இருந்திருக்கிறது. பல நூற்றாண்டுகள் நீளும் அதன் வரலாற்றை நாம் புரட்டிப் பார்ப்போமேயானால் துலங்கும் உண்மை இதுதான்: நீண்ட போர்கள், மிக மோசமான நினைவுகள். ஐரோப்பிய எழுத்து என்று ஏதேனும் ஒரு தனி வகைமை உண்டா என்ன? அவ்வாறு உள்ளதெனில், அதற்கென வரையறுக்கப்பட்ட நிலவெல்லைகளோ அல்லது வரலாறோ உள்ளதா? ஐரோப்பிய இலக்கியத்துக்கென்று தனிப்பட்ட குரல்கள் ஏதும் உள்ளனவா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகாண முயற்சிப்பதே ”யாரும் போகாத பாதை”. வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை என்றானாலும் துயரங்களால் ஆட்கொள்ளப்பட்ட எளிய மனிதர்களின் பாடுகளை இக்கதைகள் ஒருமுகமாகத் தொகுத்துப் பார்க்கின்றன.
Compiled And Translated by: கார்த்திகைப் பாண்டியன்
Genre: உலகச் சிறுகதைகள்
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 978-93-7577-509-6